தமிழக மக்களுக்காக தூங்காமல் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்! இவர்களுக்காக இன்று இதனை செய்வோமே!
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸிற்கு இன்றளவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸை தடுக்க பொதுமக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் சுகாதாரத்துறை தூங்கியே பல நாட்கள் ஆகிவிட்டது. இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்காக உழைக்கின்றனர். எனவே நாம் அவர்களுக்கு ஒத்துழைப்போம்.
இன்று மலை ஐந்து மணிக்கு தமிழகத்தில் இந்தநிலையில், இன்று ஞாயிறு மாலை 5 மணிக்கு வீட்டிற்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடி கைதட்டி கொரோனாவை ஒழிக்கப் பாடுபடும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியினை தெரிவிப்போம்.