அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
என்ஜினீயரிங் மாணவியை காதலிப்பதாக கூறி.... 40 வயது தனியார் நிறுவன ஊழியர் அட்டூழியம்...!!
என்ஜினீயரிங் படிக்கும் மாணவியை காதலிக்கிறேன் என்று தொல்லை கொடுத்த 40 வயது தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நான்காம் வருடம் என்ஜினீயரிங் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வேணுகோபால் என்பவர் என்னை அடிக்கடி என்னை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுக்கிறார். நான் கோட்டூர்புரத்தில் தங்கி உள்ளேன். அவரும் கோட்டூர்புரத்தில் வசிக்கிறார்.
அவருக்கு 40 வயது என்றும் அவரது மனைவி இறந்து விட்டதால் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இந்த விவரங்களை நான் கேட்காமலையே என் பின்னால் வந்து சொல்கிறார். சில நேரம் நடந்தும், சில சமயம் மோட்டார் சைக்கிளில் மெதுவாக என்னை பின்தொடர்ந்து வருகிறார். நான் அவரது காதலை மறுத்துவிட்டேன். இருந்தும் கடந்த ஐந்து மாதங்களாக எனக்கு இந்த காதல் தொல்லை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் காந்தி மண்டபம் அருகே நான் நடந்து வரும் போது, என் பின்னால் வந்து, அவரை திருமணம் செய்து கொள்ளா விட்டால், என்னை தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று கூறி ஆபாசமாக என்னை திட்டினார். மேலும் ஆபாசமாக செய்கை மூலமும் ஏதேதோ சொல்கிறார். எனவே அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிருக்கு அவரால் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன் இவ்வாறு அந்த பெண் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வேணுகோபால் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை போன்ற நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கைது செய்தனர். பி.காம். படித்துள்ள வேணுகோபால், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அந்த மாணவியை உயிருக்கு, உயிராக காதலிப்பதாகவும், தன்னை எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும், தன்னால் அந்த மாணவியை மறக்க முடியவில்லை, என்றும் காவல்துறையினர் விசாரணையில் வேணுகோபால் கூறியுள்ளார். நீதிமன்ற காவலில் வேணுகோபால் சிறையில் அடைக்கப்பட்டார், என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.