பெற்றோரின் கவனக்குறைவால் 4 வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்.!

பெற்றோரின் கவனக்குறைவால் 4 வயது குழந்தைக்கு நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்.!


chromepet-submerge-in-water-tank-4yearold

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் - சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு கயல்விழி(6) என்ற மகளும் சர்வேஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சர்வேஷ் நேற்று காலை வீட்டு வாசலின் முன்பு விளையாடி கொண்டிருந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் வீட்டினுள்ளே இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது குழந்தை காணாமல் போயிருந்தான்.

chennai

குழந்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பு இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல்மட்ட பலகை விலகி இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பலகையை எடுத்து பார்த்த போது சர்வேஷ் நீரில் முழ்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இருந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.