நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்!


chitra-suicide-reason

நேற்று முன்தினம் சென்னை நசரத்பேட்டை உள்ள நட்சத்திர விடுதிகளில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, நடிகை சித்ராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட தகனம் செய்யப்பட்டது. 

சித்ரா ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் சித்ரா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு நள்ளிரவில் வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

chhitra

இதனையடுத்து அந்த நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில் சித்ரா தற்கொலைக்கு கணவர் , தாயார் என இரண்டு  தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே முக்கிய காரணம் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் ஏற்கனவே சண்டையிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவின் தாயார் விஜயா , ஹேம்நாத்தை பிரிந்து வர சொல்லி தொடர்ந்து கூறி வந்ததாலும் சித்ரா மன உளைச்சலுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.