பார்க்கத்தான் 2 பேரும் பொடுசு!! ஆனால் செஞ்ச காரியமும், சொன்ன பதிலும் இருக்கே!! அதிர்ச்சியடைந்த போலீசார்..
பெற்றோர்கள் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு ரொட்டி கடை தெருவை சேர்ந்தவர்கள் மனோகரன் மற்றும் சண்முகராஜா. மனோகரனுக்கு 9 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அதேபோல் சண்முகராஜாவுக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டுருந்த நான்கு பேரும் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை எங்கு தேடியும் எந்த தகவலும் இல்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து போலீசார் சிறுவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
கரூர் ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்ற போது, மாயமானதாக கூறப்பட்ட குழந்தைகளை கண்டுள்ளனர். உடனே அவர்களை மீட்டு விசாரித்தபோது, அவர்கள் சொன்ன பதிலை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
எப்போது பார்த்தாலும் பெற்றோர் திட்டிக்கொண்டே இருப்பதாகவும், அதனால் வெளியூர் சென்று பெரிய ஆள் ஆன பிறகு மீண்டும் வீடு திரும்பலாம் என முடிவுசெய்து புறப்பட்டு வந்ததாக கூறியுள்ளனர். பின்னர் சிறுவர்களின் பெற்றோரை வரவைத்து, குழந்தைங்களை போலீசார் ஒப்படைத்தனர்.