இந்தியா

கொரோனா லீவுக்கு வீட்டுக்குவந்த பேரன்கள்..! ஆசையாக கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி..! வயிறார சாப்பிட்ட சிறுவர்களுக்கு அடுத்தடுத்து நேர்ந்த சோகம்..!

Summary:

Children died after eating poisoned chicken gravy

கொரோனா விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்த சிறுவர்கள் பாட்டி வைத்த கோழி குழம்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள செருலோபள்ளியை சேர்ந்தவர் தனம்மா. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், கொரோனா காரணமாக விடுமுறையில் இருந்த தனது மகன்களை குடிபாலா பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

பேரன்கள் வீட்டுக்கு வந்திருக்கும் உற்சாகத்தில் இருந்த தனம்மாவின் தாய் கோவிந்தம்மாள் கோழி வாங்கி குழம்பு வைத்துக் கொடுத்துள்ளார். குழம்பு வைக்கும்போது சிக்கன் மசாலா பொடிக்கு பதிலாக தவறுதலாக பூச்சிமருந்தை எடுத்து போட்டுள்ளார் கோவிந்தம்மாள்.

இதனை அறியாத கோவிந்தம்மாள் தான் வைத்த குழம்பை பேரன்களுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மூவரும் அங்கையே மயங்கி விழுந்த நிலையில், நீண்டநேரமாகியும், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகத்தின்பேரில் போய் பார்த்தனர்.

மூவரும் மயங்கி கிடப்பதை பார்த்து உடனே மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர். கோவிந்தம்மாளுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement