தமிழகம்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆசிரமத்தில் 20 பேருக்கு கொரோனா வந்தது எப்படி..?

Summary:

Children corono test positive in Raghava lawrance orphanage

நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருக்கும் விடுதியில் குழந்தைகள் உட்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சினிமாவையும் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு உதவும் நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக கொரோனா ஊரடங்கு அறிவித்ததில் இருந்து தன்னால் முடிந்த அளவிற்கு பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சேவையே கடவுள் என எப்போது கூறிவரும் இவர் சென்னை அஷோக் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதி ஒன்றினை நடத்திவருகிறார். தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் கொரோனா பரவிவரும் நிலையில், ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருக்கும் அந்த விடுதியையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

லாரன்ஸ் நடத்திவரும் இந்த விடுதியில் இருக்கும் குழந்தைகளில் 10 மாணவிகள், 5 மாணவர்கள், 3 பணியாளர்கள், 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

விடுதியில் வேலை பார்த்த சமையல்காரர்கள் மூலமே மற்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement