தமிழகம்

3 வயது சிறுவனின் விபரீத விளையாட்டு! தலை பானைக்குள் சிக்கியதால் பதறிப்போன குடும்பத்தினர்!

Summary:

child head stuck

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் சென்னை ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் 3 வயது மகன் திவ்யன், நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது சில்வர் பானையை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டான்.

தலையில் மாட்டிய பானையை சிறுவனால் எடுக்கமுடியாமல் நீண்டநேரம் துயரப்பட்டுள்ளான். ஒருகட்டத்தில் வலி தாங்கமுடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினரும் பானைக்குள் சிக்கிய திவ்யனின் தலையை வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களாலும் பானையை எடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டுள்ளனர்.

குடும்பத்தினர் நீண்டநேரம் பானையை தலையில் இருந்து எடுக்க முயன்று எடுக்கமுடியாமல் போனதால் சிறுவன் பயத்தில் மேலும் அலறி துடித்துள்ளான். பின்னர் குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், சிறுவனின் தலையில் மாட்டிய சில்வர் பானையில் எண்ணெய்யை தடவி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு சில்வர் பானைக்குள் சிக்கிய குழந்தையின் தலையை மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement