திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!



chief-minister-announced-refund-money-who-dead-in-tirup

திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நிர்வகித்து வருகிறார். விடுமுறை என்பதால் சில குழந்தைகள் தங்களது உறவினர்களை  பார்க்கச் சென்ற நிலையில் 15 குழந்தைகள் மட்டுமே காப்பகத்தில் தங்கியிருந்துள்ளனர். 

நேற்று முன்தினம் மதியம் குழந்தைகள் ரசம் சாதம் சாப்பிட நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி,காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காப்பகத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tirupur

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்கள் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின் உடல்நிலை சரியில்லாமல் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ருபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.