டே அபிலாஷு செத்துட்டான்டா.. ரீல்ஸ் மோகத்தால் உயிருக்கு போராடி மீண்டும் கம்பேக்..! வைரலாகும் 2K அட்ராசிட்டி வீடியோ.!



chennai-youth-luckily-escape-from-death

ரீல்ஸ் மோகம் காரணமாக போராடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரின் உயிர் மீண்டெழுந்த நிலையில், அவர் தொடர்பான ரீல்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

 

கடந்த அக்.13, 2024 அன்று சமூக வலைத்தளங்களில், சென்னையில் உள்ள புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்த மாணவர் ஒருவர், படிக்கட்டு பகுதியில் தனது உடலை வெளியே நீட்டி பயணித்த நிலையில், சிக்னல் கம்பம் மோதி படுகாயம் அடைந்தார். மாணவரின் அலட்சிய செயல்பாடு மற்றும் ரீல்ஸ் மோகம் காரணமாக அவர் உயிருக்கு போராடிய நிலையில், அவரின் செய்கைகளை வீடியோ எடுத்தபடி ரசித்து வந்த நண்பர்கள், இரயில் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

உடல்நலம் தேறினார்

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சென்னை புறநகர் சேர்ந்த அபிலாஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த மாணவர், தற்போது மீண்டும் உடல்நலம் தேறி இருக்கிறார். இதுதொடர்பான வேறொரு வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டி ஆகி வருகிறது. 

இதையும் படிங்க: Instant Karma: தன்வினை தன்னைச்சுட்ட சோகம்.. சிறுவனை அடிக்க பாய்ந்து, ஆட்டோ விபத்திற்குள்ளாகிய சம்பவம்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

அபிலாஷ் காயமடைந்தபோது எடுக்கப்பட்டு வெளியான காணொளி

 

அபிலாசுக்கு மரணம் இல்லை என வெளியாகி வைரலாகி வரும் காணொளி

 

 

இதையும் படிங்க: அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த தவெக நிர்வாகிகள்.. புல்லட் பாண்டிகள் புல்தடுக்கி பரிதவித்த சோகம்.!