தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கொரோனாவுடன் போராடும் தந்தையின் உயிரை காப்பாற்ற மகன் எடுத்த துணிச்சலான முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னையை சேர்ந்தவர் ஜோயல் பின்டோ. இவரது தந்தை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனை குணப்படுத்த டோலிசிசுமாப் என்ற மருந்தை வாங்கி வருமாறும் பரிந்துரை செய்துள்ளனர். விலையுயர்ந்த இந்த மருந்து மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியது. இதன் விலை 75 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறிப்பிட்ட சில மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 28 வயது நிறைந்த ஜோயல் பின்டோ சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் அலைந்து, அந்த மருந்து குறித்து விசாரித்துள்ளார். ஆனால் எந்த கடையிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மருந்து கிடைக்க தாமதமானால் தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து என எண்ணியநிலையில், அவருக்கு ஐதராபாத்தில் மருந்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அதனை தபால் மூலம் அனுப்பகூறினால் வந்துசேர 3 நாட்கள் வரை ஆகலாம் என எண்ணிய அவர் அவசரஅவசரமாக இ-பாஸ் பெற்றுக்கொண்டு தனது காரிலேயே ஐதராபாத்திற்கு சென்றுள்ளார். பின்னர் 1000கிமீக்கு மேல் பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாளுக்குள்ளேயே மருந்தினை பெற்று சென்னை திரும்பினார்.
பின்னர் அவரது தந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டு அவர் தற்போது குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. தந்தையின் உயிரை காப்பாற்ற தீயாய் செயல்பட்டு மகன் செய்த இந்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.