சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விபரீதம்.. ஆயுதப்படைக்காவலர் சுட்டு தற்கொலை..!



chennai-weapon-police-suicide-by-gunshoot

சூதாட்ட விளையாட்டில் அதிக பணத்தை இழந்ததால், மனமுடைந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகாமையில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் சரவணகுமார் என்பவர், மத்திய அரசு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். 

அப்போது பணியில் இருக்கும்போதே திடீரென தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

chennai

தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக சரவணகுமாருக்கு திருமணமாகிய நிலையில், அவர் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பணம் இழந்தது தெரியவந்துள்ளது. 

அத்துடன் இந்த விளையாட்டின் மூலமாக பணத்தை இழந்த மன விரக்தியில், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.