தலையணையை அழுத்தி மனைவியை கொலை செய்து அப்பட்டமான நாடகம் ஆடிய கணவன்.. சென்னையில் பகீர்.!

தலையணையை அழுத்தி மனைவியை கொலை செய்து அப்பட்டமான நாடகம் ஆடிய கணவன்.. சென்னையில் பகீர்.!


chennai-vannarpet-wife-killed-by-husband

 

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் கார்டனில் வசித்து வருபவர் ஷாஜகான் (வயது 48). இவர் தனியார் லெதர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஷாஜகானின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக ஹசீனா பேகம் (வயது 37) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

ஹஸீனாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதால், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினத்தில் ஷாஜகான் தனது மாமியார் சபீரா பேகத்திற்கு தொடர்பு கொண்டு, மின்சாரம் பாய்ந்து ஹசீனா பேச்சு மூச்சின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். 

chennai

பதறியபடி சபீரா மற்றும் அவரின் உறவினர்கள் ஹசீனாவின் வீட்டிற்கு வந்தபோது, அவர் இறந்துவிட்டதாக ஷாஜகான் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஹசீனா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனை முடிவுகளின் படி ஹசீனா பேகம் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனியிட்டுது, ஷாஜகானை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மனைவியை தலையணை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்து, பின்னர் மின்சாரம் பாய்ந்து மனைவி உயிரிழந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, ஷாஜகானை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.