தனியார் ஆம்னி பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. 2 பயணிகள், 4 மாடுகள் பரிதாப பலி.! ஓட்டுநர், நடத்துனர் தலைமறைவு.!

தனியார் ஆம்னி பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. 2 பயணிகள், 4 மாடுகள் பரிதாப பலி.! ஓட்டுநர், நடத்துனர் தலைமறைவு.!


Chennai to Marthandam Omni Bus Hits Lorry Accident 2 Died on Spot

 

தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு 2 பயணிகள், 4 மாடுகள் உயிரை இழந்த சோகம் நடந்துள்ளது.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்ட தனியார் ஆம்னி பேருந்து, நேற்று இரவில் மார்த்தாண்டம் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. 

இந்த பேருந்து நேற்று நள்ளிரவு நேரத்தில் சென்னை - மார்த்தாண்டம் புறவழிச்சாலையில், மார்த்தாண்டம் அருகே பயணித்துக்கொண்டு இருந்தது. 

அப்போது, அவ்வழியே மாடுகளை ஏற்றி பயணம் செய்த லாரியின் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பயணிகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

chennai

மேலும், பயணிகள் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயாமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

உயிரிழந்தோரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் லாரியில் இருந்த 4 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.