டியூசனுக்கு வந்த இளம்பெண்ணுடன் கள்ளக்காதல்.. டியூசன் மாஸ்டரின் பகீர் செயலால் அதிர்ந்துபோன மனைவி.!
தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த டியூஷன் மாஸ்டர் மனைவியின் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள திருவெற்றியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் 30 வருடமாக டியூஷன் நடத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் வருடம் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவி, மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற ஆசைப்பட்டு டியூசன் பயில வந்துள்ளார்.
டியூசன் பயில வந்த இளம்பெண்ணுக்கும் - சேகரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட, இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் சேகரின் மனைவி வனஜாவுக்கு தெரியவரவே, அவர் கணவரை தட்டி கேட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேகர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வனஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சேகரை கைது செய்தனர். இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.