பிஸ்கெட் போட வந்து, கடை ஓனர் மகளுக்கு கொக்கி.. 16 வயது சிறுமியை சீரழித்த இளைஞன்.!

பிஸ்கெட் போட வந்து, கடை ஓனர் மகளுக்கு கொக்கி.. 16 வயது சிறுமியை சீரழித்த இளைஞன்.!


chennai-thiruvotriyur-minor-girl-sexual-abuse-trap-of-l

பலசரக்கு வியாபார கடைக்கு பிஸ்கெட் போட வந்தவன், கடை உரிமையாளரின் 16 வயது மகளை காதல் வளையில் வீழ்த்தி, ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள திருவெற்றியூர் வேலாயுத நகர், ஈசானிய மூர்த்தி கோவில் தெருவில் வசித்து வருபவர் அசோக் குமார். இவர் அப்பகுதியில் தண்ணீர் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், பலசரக்கு வியாபாரமும் செய்கிறார். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23) என்ற இளைஞர், கடந்த ஒரு வருடமாக அசோக் குமாரின் கடைக்கு பிஸ்கட் போட்டு வந்துள்ளார். 

அசோக்கின் கடைக்கு வந்து செல்கையில், அவரின் 16 வயது மகளுடன் பிரவீன் குமார் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், மகளின் திடீர் மாற்றம் தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை அசோக் கண்காணிக்க தொடங்க, ப்ரவீனுடன் பேசி வருவது உறுதியானது. 

chennai

இதனையடுத்து, அசோக் குமார் தனது மகளை கண்டிக்கவே, படிக்கும் வயதில் காதல் தேவையற்றது என அறிவுரை கூறியுள்ளார். இதனை சிறுமி கண்டுகொண்டதாக தெரியவில்லை. சில வாரங்கள் கழித்தும் மகளின் செயல்பாடுகள் மாறாததால், மகளை அழைத்து அசோக் குமார் விசாரித்துள்ளார். 

அப்போது, பிரவீன் குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.