குட்டி தாதாவை போட்டுத்தள்ளிய சுள்ளான்கள்.. மண்டை தினேஷின் மண்டையை பிளந்ததால் பயங்கரம்.!

குட்டி தாதாவை போட்டுத்தள்ளிய சுள்ளான்கள்.. மண்டை தினேஷின் மண்டையை பிளந்ததால் பயங்கரம்.!


Chennai Thiruvotriyur Man Murder Case 5 Arrested Body Recovered form Railway Track

தண்டவாளத்தில் 22 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், முன்விரோதத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள திருவெற்றியூர் கார்கில் நகர், அபிபுல்லா தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரின் மகன் சீனு என்ற சீனிவாசன் (வயது 22). இவரின் மீது கொலை முயற்சி தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது திருவெற்றியூர் தண்டவாளத்தில் சீனிவாசனின் சடலம் மீட்கப்பட்டது. 

அவரின் உடல் துண்டு துண்டாக இரயில் ஏறி சென்றது போல் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கொருக்குப்பேட்டை இரயில்வே காவல் துறையினர் சிதறியிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உடலின் அருகே உடைந்த பாட்டில், இரத்தக்கறையுடன் உள்ள கற்கள் போன்றவை மீட்கப்பட்டன. இதனால் சீனிவாசன் அடித்து கொல்லப்பட்டு, உடல் தண்டவாளத்தில் போடப்பட்டதால் இரயில் சக்கரம் ஏறி துண்டானது தெரியவந்தது. 

chennai

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவெற்றியூர் அண்ணாமலை நகரில் வசித்து வந்த உத்திரபிரதேசம் மாநில ரகிமான் (வயது 19), ராஜேஷ் (வயது 23), தீனா என்ற மாமா (வயது 18), மணி (வயது 23), தினேஷ் என்ற மண்டை தினேஷ் (வயது 19) ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களிடம் நடந்த விசாரணையில், 6 மாதத்திற்கு முன்னர் சீனிவாசன் மண்டை தினேஷின் மண்டையில் அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிவாசன் ஜாமினில் வெளியே வந்ததும், மீண்டும் மண்டை தினேஷுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சீனிவாசனை போட்டுத்தள்ள திட்டமிட்ட மண்டை தினேஷ் மற்றும் அவனின் கூட்டாளிகள், நட்பாக பேசுவது போல அழைத்து மதுவை குடிக்க வைத்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.