கர்ப்பத்தை தொப்பையாக மழுப்பிய மகள்.. மருத்துவமனையில் பிரசவம்.. பதறிப்போன தாயிடம் பரபரப்பு பதில்.. அண்ணனால் விபரீதம்.!

கர்ப்பத்தை தொப்பையாக மழுப்பிய மகள்.. மருத்துவமனையில் பிரசவம்.. பதறிப்போன தாயிடம் பரபரப்பு பதில்.. அண்ணனால் விபரீதம்.!


Chennai Thiruvotriyur 15 Aged Minor Girl Delivery Baby Abused by Brother

 

தாயிடம் தொப்பை இருப்பதாக கூறி நடித்த சிறுமிக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததால் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திருவெற்றியூரை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவில் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  இதனால் சிறுமியை மீட்ட தாய், இராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தாய் சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக சித்தி மகனான அண்ணனுடன் காதல் வயப்பட்ட சிறுமியை அண்ணன் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது உறுதியானது.

chennai

இதற்கிடையில், மறுநாள் காலையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளின் வயிறு பெரிதாக இருக்கும் போது கண்டுகொள்ளாத தாய், அதனை கவனித்து கேட்டபோது சரியாக சாப்பிடாத காரணத்தால் வயிறு பெரிதாகிவிட்டது என்று கூறியுள்ளார். தாயும் அதனை அலட்சியமாக எடுத்துள்ளார். 

கர்ப்பமாக இருக்கும் சூழலிலேயே சிறுமி இறுதி வரை பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவெற்றியூர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் முகேஷை தேடி வருகிறார்கள்.