கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
பள்ளிக்காதலுக்கு எதிர்ப்பு.. இன்ஸ்டாவில் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கொடூரம்.!

காதலிக்க பெண் ஒத்துழைக்காததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணின் பெயரில் போலியான கணக்கை தொடங்கி, ஆபாசமாக சித்தரித்த படங்களை பதிவிட்ட இளைஞர் திருவான்மியூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 23) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய மர்ம நபர், அந்த இன்ஸ்ட்டா பக்கத்தில் பவித்ராவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயம் பவித்ராவின் உறவினருக்கு தெரியவரவே, அவர் திருவான்மியூர் J6 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அடையார் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மர்ம நபருக்கு வலைவீசியுள்ளனர்.
விசாரணையில், பவித்ராவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, போலியான இன்ஸ்டா கணக்கில் பதிவு செய்தது ராஜேஷ் என்ற 30 வயது வாலிபர் என்பது உறுதியானது. இதனையடுத்து, திருவான்மியூர் காவல் துறையினர் ராஜேஷை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், ராஜேஷ் பள்ளியில் படிக்கும் போது பவித்ரா அறிமுகமாகி இருக்கிறார்.
சமீப காலமாகவே பவித்ராவை காதலிக்க வற்புறுத்தி வந்த ராஜேஷ், காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு பவித்ரா எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ராஜேஷ் பவித்ராவின் பெயரில் போலியான இன்ஸ்டா கணக்கை தொடங்கி, அதில் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்துள்ளார்.
ராஜேஷிடம் இருந்து 2 செல்போன்களை கைப்பற்றிய காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.