கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
துப்பாக்கி முனையில் இரயில் டிக்கெட் கவுண்டரில் ரூ.1.32 இலட்சம் பணம் கொள்ளை.. சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்.!

திருவான்மியூர் இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 இலட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள திருவான்மியூரில் மின்சார இரயில் சேவை நடைமுறையில் உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி மார்க்கத்தில் செல்லும் இரயில்கள் இவ்வழியாக செல்லும். திருவனமியூர் இரயில் நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இரயில் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இன்று திருவான்மியூர் இரயில் நிலையத்தில் பயணசீட்டு வழங்கும் அதிகாரியாக திக்காராம் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அவரிடம் இருந்து ரூ.1.32 இலட்சத்தை பறித்து சென்றுள்ளார். பயணசீட்டு வழங்கும் மையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மர்ம நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது. பட்டப்பகலில் சென்னையில் உள்ள இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.