சென்னை சிறுமி மதுரையில் தூக்கிட்டு தற்கொலை.. புதிய கட்டிடத்தில் பகீர் சம்பவம்.. 7 பக்க கடிதத்தில் கண்ணீர் தகவல்.!

சென்னை சிறுமி மதுரையில் தூக்கிட்டு தற்கொலை.. புதிய கட்டிடத்தில் பகீர் சம்பவம்.. 7 பக்க கடிதத்தில் கண்ணீர் தகவல்.!


chennai-thiruvanmiyur-15-aged-minor-girl-suicide-madura

புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், டிராவல்ஸ் உரிமையாளர் மகள் படிக்க இயலாமல் தவித்து மனம் வருந்தி வீட்டை விட்டு வெளியேறி உயிரை மாய்துகொண்ட சோகம் தெரியவந்துள்ளது. சிறுமியின் விபரீத முடிவால் ஒரேயொரு ஆசை மகளையும் இழந்து பெற்றோர் கண்ணீருடன் தவிப்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், குலமங்கலம் பசுபதி நகரில், ஒருவர் சொந்தமாக வீடுகட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணியின் போது, இரவு நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக இருந்துள்ளார் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அலங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், சிறுமி சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும் செந்திலின் மகள் திவ்ய தர்ஷினி (வயது 15) என்பதும், இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் கண்ணீருடன் மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், செந்தில் டிராவல்ஸ் நடத்தி வரும் நிலையில், அவரின் ஒரே மகள் திவ்ய தர்ஷினி. இவர் திருவனமியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

chennai

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறுமியின் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளிக்கு சென்ற செந்திலிடம் மகள் திவ்ய தர்ஷினி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார் என்றும், வீட்டில் படிக்க அறிவுறுத்துமாறும் கூறியுள்ளனர். இதனால் மகள் வீட்டிற்கு வந்ததும் பெற்றோர் பொதுத்தேர்வு நடக்க இருப்பதால், அதற்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் தான் சிறுமி கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார்.
 
மேலும், பெற்றோர் கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வைத்திருந்த நிலையில், அதனை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால், மகள் மாயமானது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வரும்போதே, திவ்யதர்ஷினி தனது தோழிக்கு தொடர்பு கொண்டு திருச்சியில் இருப்பதாக பேசியுள்ளார். இது அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது பதில் அளிக்கவில்லை.

மீண்டும் அந்த அலைபேசிக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, பூ விற்பனை செய்யும் பெண்ணிடம் திவ்யதர்ஷினி செல்போன் வாங்கி பேசியது தெரியவந்தது. இதனையடுத்து, திருச்சி விரைந்த பெற்றோர் மற்றும் காவல் துறையினர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் எந்த பலனும் இல்லை. இந்த சூழலில் தான் சிறுமியின் சடலம் அலங்காநல்லூரில் தூக்கிட்டு நிலையில் மீட்கப்பட்டது. அவரிடம் இருந்த செல்போன் மூலமாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai

நிகழ்விடத்தில் சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்னதாக 7 பக்க கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் பெற்றோர், தோழி, ஆசிரியர் என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், "எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், என்னால் படிக்க இயலவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. இதனால் தற்கொலை செய்ய வீட்டினை விட்டு வெளியேறினேன். சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்தேன். திருச்சியில் உள்ள கோவிலுக்கு 2 நாட்கள் ஆட்டோவில் வந்து சென்றேன். 

அதனைத்தொடர்ந்து, நான் மதுரைக்கு வந்துட்டேன். இங்கு எனது முடிவை தேடிக்கொள்கிறேன். என்னை அனைவரும் மன்னியுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமி உண்மையில் திருச்சி, மதுரை பகுதியில் தனியே சுற்றி வந்தாரா? அவரை யாரேனும் கடத்தி கொண்டு வந்து மிரட்டி கடிதம் எழுதி வாங்கி கொலை செய்தனரா? என விசாரணை நடக்கிறது. மேலும், பிரேத பரிசோதனை முடிவில் கொலையா? தற்கொலையா? என்பது அம்பலமாகும் என்பதால் விசாரணை நடந்து வருகிறது.