ஆஞ்சநேயர் கோவில் கேமிரா முன்பு செல்போனில் ஆபாச படம்; இளைஞர் அதிரடி கைது.!
கோவில் கண்காணிப்பு கேமிராவை நோக்கி ஆபாச படம் காண்பித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி, மேயர் செட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 19 ஆம் தேதி வருகை தந்த இளைஞர் அங்கும் இங்குமாக சுற்றி வந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்த கேமிராவுக்கு முன்பு இளைஞர் ஆபாச படத்தை செல்போனில் பதிவிட்டு காண்பித்துள்ளார். இதனைக்கண்ட கோவிலில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற ஜாம்பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் அருணை அதிகாரிகள் கைது செய்தனர்.