மயானக்கொள்ளையில் மர்டர் எண்ணத்துடன் திரிந்த 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது..! சென்னையில் பேரதிர்ச்சி.!
மயானக்கொள்ளையில் மர்டர் எண்ணத்துடன் திரிந்த 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது..! சென்னையில் பேரதிர்ச்சி.!

திருவிழாவில் வைத்து 15 வயது சிறுவனை தாக்கியவரை கொலை செய்யும் எண்ணத்துடன், பயங்கர ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திரு வி.க நகர், ஜானகி ராமன் தெருவில் ஸ்ரீதேவி அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது.
அப்போது, சில இளைஞர்கள் திருவிழாவில் கைகளில் அரிவாளுடன் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 4 பேர், காவலர்களை பார்த்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். இவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முரளி (வயது 28). இதே பகுதியை சேர்ந்த 17 வயதுஉடைய 2 சிறார்கள் மற்றும் 15 வயதுடைய சிறுவனுடன் சுற்றுவது அம்பலமானது. 15 வயது சிறுவனை சாமி ஊர்வலத்தின் போது தேவராஜ் என்பவர் தாக்கவே, அவரை கொலை செய்ய அரிவாளுடன் சுற்றுவதும் அம்பலமானது.
இதனையடுத்து, முரளியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், 3 சிறார்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து அரிவாள் போன்ற ஆயுதமும் கைப்பற்றப்பட்டது.