தமிழகம்

சொந்தக்காரர் வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு தம்பதி துணிகர செயல்.. நடந்த பகீர் சம்பவம்.!

Summary:

சொந்தக்காரர் வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு தம்பதி துணிகர செயல்.. நடந்த பகீர் சம்பவம்.!

சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்துள்ள அகரம் பகுதியை சார்ந்தவர் ரவி. இவரது மனைவி சுகுணா. இந்த தம்பதிக்கு புஷ்பலதா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 23 ஆம் தேதி புஷ்பலதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதன்போது, வீட்டிற்குள் திடீரென புர்கா அணிந்து வந்த பெண்ணுடன் வருகைதந்த மர்ம நபர் உட்பட இரண்டு பேர், புஷ்பலதாவின் கழுத்தில் கத்தியை வைத்து, கை-கால்களை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், ரூ.1 இலட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணையில் ரவியின் வீட்டிற்குள் வந்து கொள்ளையடித்து சென்றது சுகுணாவின் உறவுக்கார பெண் மற்றும் அவரின் கணவர் என்பது உறுதியானது. அவர்கள் இருவரையும் தற்போது கைது செய்த காவல் துறையினர், பணம் மற்றும் நகைகளை மீட்டனர். 

பின்னர், இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உறவுக்கார பெண்ணிடம் பணம் மற்றும் நகை இருப்பதை அறிந்த தம்பதி, கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement