இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல நடித்து, அரசு அதிகாரிகளிடமே கைவரிசை காண்பித்த கேடி ஆசாமி கைது.!

இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல நடித்து, அரசு அதிகாரிகளிடமே கைவரிசை காண்பித்த கேடி ஆசாமி கைது.!


Chennai Tambaram Man Act Fake Bribery Eructation Officer Arrest by Police

சென்னையில் உள்ள சைதாப்பேட்டையை சார்ந்தவர் அசோகன். இவர் தரமணியில் இருக்கும் நீர்வளத்துறை அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். சம்பவத்தன்று, இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று அசோகனிடம் அறிமுகம் செய்த மர்ம நபர், அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

இதனைப்போல, கோயம்பேடு சி.எம்.டி.ஏ அலுவலகத்திலும் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ராஜன்பாபு என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தரமணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வந்தது. 

chennai

விசாரணையில், நிகழ்விடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்கையில், மர்ம நபரின் அடையாளம் காணப்பட்டு தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சின்னையன் (வயது 53) கைது செய்யப்பட்டார். இவரிடம் நடைபெற்ற விசாரணையில், சின்னையன் தாம்பரம் பகுதியில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்துள்ளார். 

கொரோனாவுக்கு பின்னர் தொழில் நஷ்டம் ஏற்படவே, இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல அரசு அதிகாரியிடம் நடித்து பணம் பறிக்க முயற்சித்தது அம்பலமானது. சின்னையன் இதனைப்போல வேறு இடங்களில் கைவரிசை காண்பித்து இருக்கிறாரா? என்ற விசாரணை நடந்து வருகிறது.