#RainAlert: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.! 

#RainAlert: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.! 



Chennai RMC Announcement 12 th July

வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

chennai

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், தற்போது மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை போல, நாளை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெற்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அங்கே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.