27 மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

27 மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!


Chennai RMC Announce Today Rain

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்ககடல் - தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16-ம் தேதியான இன்று, "தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 

chennai

17ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.