அப்படிப்போடு.. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு; மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மேற்குத்திசைக்காற்று வேகமாறுபாடு காரணமாக 5ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் பருவமழைக்கான காரணி ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரவே செய்யும். கடலோர பகுதிகளில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.