தமிழ்த்தாய் மன்னித்திடுவாள், சட்டம்?? - தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலைவணங்காத அதிகாரிகளுக்கு வைரமுத்து கண்டனம்.!

தமிழ்த்தாய் மன்னித்திடுவாள், சட்டம்?? - தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலைவணங்காத அதிகாரிகளுக்கு வைரமுத்து கண்டனம்.!


Chennai Reserve Bank Employees Dishonour Tamil Language Anthem

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலைவணங்காத அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பணியாளர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது, சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். 

இதனைக்கண்டு அதிருப்தியடைந்த செய்தியாளர், "தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் போது எதற்காக எழுந்து நிற்கவில்லை?" என்று கேள்வி எழுப்பவே, அதிகாரிகள், "தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, நீதிமன்ற உத்தரவே உள்ளது" என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

chennai

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை உருவாகிவிட, பல அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், "தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே.. சட்டப்படியும் எழுந்து நிற்கலாம்; அறத்தின்படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?” என்று தெரிவித்துள்ளார்.