ஒன்றல்ல., இரண்டல்ல.. 100 பெண்களின் போட்டோ.. 9 ஆண்டுகளாக அழகிய பெண்களை விபச்சாரிகளாக இலட்சத்தில் விற்பனை செய்த கயவன் சென்னையில் கைது..!

கடந்த 9 ஆண்டுகளாக பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி பாலியல் தொழிலுக்கு இலட்சக்கணக்கில் விற்பனை செய்த கயவன் கைது செய்யப்பட்டான். பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கொடூரன், தனது குடும்பத்தை வந்து சந்தித்துவிட்டு செல்லும் போது கைது செய்யப்பட்டான்.
சென்னையில் உள்ள பெரம்பூரில் வசித்து வருபவர் ஜேக்கப் என்ற கார்த்திகேயன் (வயது 38). ஜேக்கப் கேரளா போன்ற வெளிமாநிலத்தில் வசித்து வரும் பெண்களை சினிமா படம் எடுப்பதாக ஆசைகாட்டி சென்னைக்கு அழைத்து வந்து, அங்கு வாடகை வீட்டில் தங்கவைத்து பாலியல் தொழிலுக்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரை விற்பனை செய்து பணம் சம்பாரித்து இருக்கின்றார்.
இவனின் மீது 5 பாலியல் புகார்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தாலும், கொரோனா காலத்தில் ஜேக்கப்பின் தொழில் என்பது பாதிப்பை சந்திக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக காவல் துறையினரிடம் அகப்படாமல் இருந்தவனை, காவல் துறையினரும் தேடி திணறிபோனயினர்.
விசாரணையில், சினிமாவில் நடிக்க ஆசைப்படும் அழகிய இளம்பெண்கள் ஜேக்கப்பின் கைகளால் சிக்கி பல துயரங்களை சந்தித்துள்ளனர். இவனை கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைத்த காவல் துறையினர், விசாரணையை நடத்தினர்.
இதனையடுத்து, ஜேக்கப் தனது குடும்பத்தினரை ரகசியமாக கொரட்டூரில் வந்து சந்தித்து செல்வதாக தெரியவர, பொறிவைத்த காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவனிடம் நடந்த விசாரணையில் 100 பெண்களின் புகைப்படம், விடியோக்கள் இருந்துள்ளன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், தொடர் விசாரணை நடந்து வருகிறது.