சென்னைக்கு வேலைதேடி வரும் இளம்பெண்கள் டார்கெட்.. 9 பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்..! தலைநகரில் பேரதிர்ச்சி..!

சென்னைக்கு வேலைதேடி வரும் இளம்பெண்கள் டார்கெட்.. 9 பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்..! தலைநகரில் பேரதிர்ச்சி..!


Chennai Prostitution Gang Arrested Shocking Truth

 

வேலைக்காக சென்னை வரும் இளம்பெண்களை குறிவைத்து விபச்சார கும்பல் செய்த பேரதிர்ச்சி காரியம் அதிரவைத்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வேலைதேடி வரும் இளம்பெண்களை குறிவைத்து கும்பலொன்று சினிமா மோகம், தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு என ஆசை வார்த்தை கூறி, பங்களா & அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை அதிகாரிகள், நேற்று திருவெல்லிக்கேணி, எல்லீஸ் ரோடு உட்பட பல பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளை கண்காணித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்து வருவது உறுதியானது. 

chennai

அங்குள்ள குப்புமுத்து தெருவில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரான பூந்தமல்லியை சேர்ந்த பிரகாஷ் (வயது 52), மாதவரத்தை சேர்ந்த சுதன் (வயது 31) ஆகியோரை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெளிமாநில பெண்கள் 9 பேர் மீட்கப்பட்டனர். 

இந்த கும்பலிடம் இருந்து 4 செல்போன், 1 ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை கைப்பற்றப்பட்டன. தலைமறைவான ஒரு விபச்சார புரோக்கருக்கு வலைவீசப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 9 பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபச்சார கும்பலை சேர்ந்த 2 பேர் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.