வயது பெண்ணுக்கு எப்படி அளவெடுத்து ஜாக்கெட் தைப்ப? - டெய்லருக்கு கும்மாங்குத்து.. 2 இளைஞர்கள் வெறிச்செயல்.!

வயது பெண்ணுக்கு எப்படி அளவெடுத்து ஜாக்கெட் தைப்ப? - டெய்லருக்கு கும்மாங்குத்து.. 2 இளைஞர்கள் வெறிச்செயல்.!


Chennai Perambur Tailor Attacked by Youngsters

 

அளவு ஜாக்கெட் இல்லாததால் அளவெடுத்து ஜாக்கெட் திருத்தம் செய்துகொடுத்து டெய்லரை இளைஞர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூர் பாலமுருகன் தெருவை சேர்ந்தவர் அழகப்பன். இவர் அயனாவரத்தில் உள்ள பெரியார் நகரில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அழகப்பனின் கடைக்கு வந்த 2 இளம்பெண்கள், ஜாக்கெட் கொடுத்து அதனை ஆல்ட்ரேஷன் செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர். 

அவர்கள் அளவு ஜாக்கெட் தராத காரணத்தால் அழகப்பன் அளவெடுத்து ஜாக்கெட் ஆல்ட்ரேஷன் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை அழகப்பனின் கடைக்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் 2 பேர், அழகப்பனை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், நீ எப்படி பெண்களுக்கு அளவெடுப்பாய்? என்று கூறி அடித்து நொறுக்கி, முட்டி போட்டுவைத்து பெண்களிடம் வீடியோ காலில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

chennai

இளைஞர்கள் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்த அழகப்பனை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அழகப்பன், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அழகப்பனிடமும், வந்து சென்ற பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 இளைஞர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.