அடேங்கப்பா.. 43 இளைஞர்கள், 48 லட்சம் பணம் மோசடி.. கவர்ச்சி விளம்பரம் பணம்பறிக்கும் மூலதனம்.!

அடேங்கப்பா.. 43 இளைஞர்கள், 48 லட்சம் பணம் மோசடி.. கவர்ச்சி விளம்பரம் பணம்பறிக்கும் மூலதனம்.!



Chennai Pallikaranai Advertisement Ship Job Forgery 2 Arrested by Police

சொகுசு கப்பலில் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாங்கி தருவதாக ரூ.48 இலட்சம் மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர், அவரின் உதவியாளர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சார்ந்தவர் வினோத் (வயது 35). இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இவர் வழங்கிய புகாரில், "முகநூலில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவை, கை நிறைய சம்பளம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரம் பகிரப்பட்டது. 

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்து, சம்பந்தப்பட்ட நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு பேசுகையில் ரூ.1 இலட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் ரூ.1 இலட்சம் செலுத்தியதும், ஒரு நாளில் நேர்காணலும் நடைபெற்றது. 

chennai

நேர்காணல் நடந்து பல நாட்கள் ஆகியும் கப்பலில் வேலை கிடைக்கவில்லை. எனது பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனைப்போல மொத்தமாக 43 பேரிடம் இருந்து ரூ.48 இலட்சம் பறிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா மற்றும் உதவியாளர் திவ்ய பாரதி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சென்னை ஆயிரம்விளக்கு காவல் ஆய்வாளர் மோகன்தாஸ், விசாரணை மேற்கொண்டு ராஜாவை கைது செய்தார். விசாரணையில், ராஜா (வயது 35) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மங்களகிரி இராமச்சந்திரபுரத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உதவியாளராக இருந்த சென்னை பூந்தமல்லியை சார்ந்த திவ்வியபாரதியையும் (வயது 27) அதிகாரிகள் கைது செய்தனர்.