உண்டவீட்டிற்கு துரோகம் செய்தவர் அடித்தே கொலை; உண்மையறிந்தும் சரக்கடித்து கொலைக்கு துணைபோன காவலர்.!!



chennai-nolambur-murder-case-police-officer-also-arrest

 

சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராமன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவரிடம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பாபுஜி வேலை பார்த்து வந்துள்ளார். பாபுஜி தான் வசூல் செய்த பணத்தை கையாடல் செய்ததாகவும், 2 1/2 பவுன் நகைகளை திருடியதாகவும் நொளம்பூர் காவல் நிலையத்தில் வெங்கட்ராமன் புகார் அளித்திருக்கிறார். 

கடந்த ஜூன் 23ஆம் தேதி இரவு கோயம்பேட்டிலிருந்த பாபுஜி, வெங்கட்ராமன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் வீட்டின் மாடியில் வைத்து சரமாரியாக பாபுஜி தாக்கப்பட்டு, இறுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். 

உடலை மாங்காடு கொளப்பாக்கம் பகுதியில் வைத்து எரித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைனான்சியர் வெங்கட்ராமன், அவரது கூட்டாளியான சரவணன், திலீப், நவீன் கோபி, வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். 

chennai

இவர்கள் பாபுஜியை கடத்தி நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்திய சமயத்தில், பூந்தமல்லி குற்றப்பிரிவு தலைமை காவலர் அமல்ராஜ், இவர்களின் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. 

சம்பவம் நடந்த வீட்டில் மதுபானம் அருந்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குதல் சம்பவங்களை நேரில் பார்த்து, பின் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தலைமை காவலர் அமல்ராஜை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்த்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.