பல ஆண்களுடன் போனில் சிரிக்கச்சிரிக்க பேச்சு.. மனைவியை குடும்பத்தோடு கொலை செய்த கணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

பல ஆண்களுடன் போனில் சிரிக்கச்சிரிக்க பேச்சு.. மனைவியை குடும்பத்தோடு கொலை செய்த கணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!


Chennai New Vannarapet Man Killed Wife With Family 

மனைவிக்கு பல ஆண்களோடு தொடர்பு  இருப்பதாக சந்தேகித்த கணவன் செய்த பெரும் கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது. திரைப்பட பாணியில் பெண்ணின் கை, கால்கள்  பிடிக்கப்பட்டு, வாய் பொத்தப்பட்டு துள்ளத்துடிக்க நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தில் வசித்து வருபவர் செல்வம் (வயது 30). இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிரர். செல்வத்தின் மனைவி சுமித்ரா (வயது 26). தம்பதிகளுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சுமித்ரா வீட்டில் மயங்கி இருந்தார். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து பார்க்கையில் சுமித்ரா இறந்தது உறுதியானது. அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

பிரேத பரிசோதனை முடிவில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, அவரின் கணவர் செல்வம், தந்தை செல்வகுமார், தாய் ரெஜினா, உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில் குடும்பமாக சேர்ந்து சுமித்ராவை கொலை செய்தது அம்பலமானது.

chennai

இதுகுறித்து ரெஜினா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "செல்வம் - சுமித்ரா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் 2 மகன்கள் இருக்கின்றனர். திருவெற்றியூர் பகுதியில் கூட்டுக்குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்த நிலையில்,, சுமித்ராவுக்கு மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அங்கிருந்து வீட்டை காலிசெய்துவிட்டு புதுவண்ணாரப்பேட்டைக்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். அங்கு பல ஆண்களோடு சுமித்ராவுக்கு பழக்கம் ஏற்படவே, எந்நேரமும் செல்போனில் பேசி வந்துள்ளார். குடும்பத்தினர் சுமித்ராவை கண்டித்தும் பலனில்லை. சம்பவத்தன்று காலையிலேயே வெளியே சென்றவர் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். 

chennai

குடும்பத்தினர் கேட்டபோது கோவிலுக்கு சென்றுவருவதாக கூறவே, சண்டை நடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்துள்ளனர். படுக்கையறையில் உறங்க சென்ற சுமித்ராவை கொலை செய்ய நாங்கள் திட்டமிட்டோம். சுமித்ராவின் கையை கணவர் பிடிக்க, காலை செல்வம் பிடிக்க, நானா வாயை பொத்தி கழுத்தை நெரித்தேன். 

இந்த சம்பவத்தில் சுமித்ரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழக்கவே, அவர் மயங்கிவிட்டதாக உறவினர்களை நம்ப வைத்து நாடகம் ஆடியுள்ளார். இதனையடுத்து, காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வம், செல்வகுமார், ரெஜினா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.