ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சென்னையில் மீண்டும் சோகம்: கடல் அலையில் சிக்கி 2 இளைஞர்கள் பரிதாப பலி..!
சென்னையில் உள்ள நீலாங்கரை, அக்கரை கடற்கரை பகுதி ஆபத்தான நீரோட்டம் கொண்ட பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து சென்றாலும், அவர்கள் குளிக்க காவல்துறையினர் எவ்விதமான அனுமதியும் கொடுப்பதில்லை.
சென்னை மெரினா கடற்கரையை போல இங்கு காவலர்கள் கண்காணிப்பு பெரிதளவு கிடையாது எனினும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கடலுக்குள் யாரும் இறங்கினால் அவர்களை எச்சரிப்பதும் உண்டு. இதனை கேட்காமல் செயல்படும் நபர்களால் உயிரிழப்புகளும் நடக்கின்றன.
இந்நிலையில், அக்கரை கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சோழிங்கநல்லூர் பகுதியைச் சார்ந்த பிரகாஷ் (வயது 20), கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, பாலவாக்கம் பகுதியில் உள்ள கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த சக்தி (வயது 24) என்பவரும் அலையின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்த நபர்கள், ரிசார்ட்டை ஒட்டிய கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது, நான்கு பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தது சமீபத்தில் தான் நடந்தது. இவர்களின் உடல் நீண்ட தேடலுக்கு பின்னர், நேற்று முன்தினம் மீட்டு கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.