தமிழகம்

அதிர்ச்சி! கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Summary:

Chennai missing men found in cooum river

சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவன் பாட்ரிக். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜீவன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை பல்லவன் சாலை அருகே உள்ள கூவம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலம் சனிக்கிழமை காணாமல்போன ஜீவன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜீவன் கால் தவறி ஆற்றில் விழுந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலைசெய்யபட்டு கூவம் ஆற்றில் வீசப்பட்டாரா என போலீசார் விசாரித்துவருகின்றன்னர்.


Advertisement