நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
கத்தி முனையில் தங்க மோதிரம் கொள்ளை; கஞ்சா போதையில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு சிக்கிய புள்ளிங்கோஸ்.!
கத்தி முனையில் தங்க மோதிரம் கொள்ளை; கஞ்சா போதையில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு சிக்கிய புள்ளிங்கோஸ்.!

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், பள்ளிக்கரணை பகுதியில் செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் நண்பர் வெங்கடேசனுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, திடீரென குறுக்கே புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இவர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி சதீஷ் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்து சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விசாரணை நடத்திவரும்போதே, கஞ்சா போதையில் மூவர் கும்பல் தாங்கள் களவாடிய பொருளுடன் கத்தியை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ எடுத்து பதிவு செய்திருந்தது. இந்த விடியோவை கண்ட அதிகாரிகள், அவர்களின் செல்போன் எண்ணை கண்டறிந்து கைது செய்ய நேரில் சென்றனர்.
அப்போது, மிதமிஞ்சிய கஞ்சா போதையில் படுத்து உறங்கிய மூவரையும் அதிகாரிகள் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், இவர்கள் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), பால் (வயது 22), விஷ்ணு (வயது 23) என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் விக்னேஷ் மற்றும் கிங்ஸ்லி பால் ஆகியோர் கொலை வழக்கில் சிக்கி இருக்கின்றனர். இவர்களில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு, மதில் சுவரைத் தாண்டி சென்ற போது கை உடைந்து போனது. அச்சமயத்தில் அப்பாவி போல நடித்து, கண்காணிப்பு பணிக்கு வந்த காவலரின் உதவியால் மாவுக்கட்டும் போட்டு இருக்கிறார் என்பது அம்பலமானது.