#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
30 வயது இளைஞருடன் 40 வயது தாய் தகாத உறவு..! ஊருக்கு ஒதுக்குப்புறமாக உல்லாசம்..! நேரில் பார்த்த மகன்.! அடுத்து நடந்த பயங்கர சம்பவம்.!

தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரை கொலை செய்து, அவரின் மர்ம உறுப்பை மகன் வெட்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகரான மாங்காடு பகுதிக்கு அருகே அமைந்துள்ள மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். 30 வயதாகும் ரஞ்சித்குமார் ஓட்டுநராக பணியாற்றிவரும் நிலையில் அவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சித்குமார் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த விமல் என்ற 19 வயது இளைஞரின் தாயுடன் ரஞ்சித்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் விமலுக்கு தெரியவர தனது தாயை பலமுறை கண்டித்துள்ளார். இருந்தும் விமல் கூறுவதை அவரது தாய் காதில் வாங்கிகொள்ளவில்லை. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கையும் மீறி இருவரும் சில நாட்களுக்கு முன்னால் தன்னந்தனியாக ஒதுக்குப்புறத்தில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளன்னர்.
இது விமலுக்கு எப்படியோ தெரியவர, ரஞ்சித்குமாரை கொலை செய்ய விமல் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 26-ஆம் தேதி ரஞ்சித்குமார் தன்னுடைய நண்பர் ஒருவருடன் மீஞ்சூர் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள செங்கல் சூளை பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனை முன்பே தெரிந்துகொண்ட விமல் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு சென்று மறைந்திருந்த நிலையில், அங்கு வந்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பரை தாக்க தொடங்கியுள்ளார். இதில் ரஞ்சித்குமாரின் நண்பர் தப்பித்து ஊருக்குள் சென்று ஆட்களை கூட்டிவருவதற்குள் விமல் மற்றும் அவரது நண்பர்கள் ரஞ்சித்குமாரை கொலை செய்து அவருடைய மர்ம உ றுப்பையும் துண்டித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விமல், அவருடைய நண்பர் பிரேம், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.