பெண்ணுடன் சென்றவரை மிரட்டி பணம்பறித்த முன்னாள் ஊர்காவல்படை அதிகாரி; விசாரணையில் அதிரடி திருப்பதுடன் பரபரப்பு பின்னணி..! விபரம் உள்ளே.!

பெண்ணுடன் சென்றவரை மிரட்டி பணம்பறித்த முன்னாள் ஊர்காவல்படை அதிகாரி; விசாரணையில் அதிரடி திருப்பதுடன் பரபரப்பு பின்னணி..! விபரம் உள்ளே.!


Chennai Man Arrested by Cops 

 

ஊர்க்காவல் படை வேலையை இழந்து, ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, கிடைத்த வேலையையும் சரிவர கவனித்த இளைஞர் இறுதியில் வழிப்பறி கொள்ளையனாகிய விபரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கோயம்பேட்டில் இருந்து பெண்ணுடன் வீடு திரும்பியபோது, அடையாளம் தெரிய நபர் மணிகண்டனை இடைமறித்தார். 

தன்னை காவலர் என அறிமுகம் செய்தவர், பெண்ணுடன் வந்ததை பெற்றோரிடம் கூறுவேன், நீ சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக தெரிவிப்பேன் என மிரட்டி, ரூ.15 ஆயிரம் G-Pay மூலமாக வங்கிக்கணக்கில் அனுப்ப சொல்லி இருக்கிறார்.

பணத்தை அனுப்பிய பின்னர், தான் விசாரணைக்காக அழைக்கும்போது வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின் மறுநாளில் அதே நபர் உயர் அதிகாரிகளியிடம் புகாரை தெரிவிக்கவுள்ளேன் என்று கூறி ரூ.65 ஆயிரம் பணத்தையும் பெற்றுள்ளார். இவ்வாறாக மொத்தமாக ரூ.92 ஆயிரம் பணம், நான்கு சவரன் தங்க நகை ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.

காவலர் என்று கூறியவர் தொடர்ச்சியாக பணம் கேட்டதால் சந்தேகமடைந்த மணிகண்டன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி கேமிரா கண்காணிக்கப்பட்டது. 

சம்பந்தப்பட்ட நபர் பயன்படுத்திய வாகனம் சூளைமேடு பெண் காவலரின் இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. இதனால் பெண் காவலரிடம் விசாரணை நடத்தியபோது, பணம்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது பாலாஜி என்பது தெரியவந்தது. 

பெண் காவலர் பாலாஜியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். எம்.பி.ஏ பட்டதாரியான பாலாஜி, கடந்த 2016ல் ஊர்க்காவல் படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பின் வேலையை விட்டு நின்றுள்ளார்.

அச்சமயத்தில் பெண் காவலரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஊர்க்காவல்படை வேலையை விட்ட பாலாஜிக்கு வேலை கிடைக்காத காரணத்தால், அவர் பணம்பறிக்க தொடங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மி அடிமையாக இருந்தவர் ரூ.92 ஆயிரம் பணமும் இழந்துள்ளார். 

அவர் அடகு வைத்த 4 கிராம் நகையை மீட்ட அதிகாரிகள், பாலாஜியை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.