தமிழகம்

காதல், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பலாத்காரம்..! ராயபுரம் ரெஜிஸ்டர் ஆபிஸ், 10 இலட்சம், 100 பவுன் நகை..! கண்ணீரில் பெண்.!

Summary:

காதல், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பலாத்காரம்..! ராயபுரம் ரெஜிஸ்டர் ஆபிஸ், 10 இலட்சம், 100 பவுன் நகை..! கண்ணீரில் பெண்.!

சென்னையில் உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நடனப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தவர் பிரபு. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், பெண்மணி கும்மிடிப்பூண்டி காவல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், "எனது காதலர் பிரபு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த கொடூரத்தை வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று மிரட்டுகிறார்" என்றும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் முழு விபரமாவது, "கடந்த 2019 ஆம் வருடம் எனது தம்பி நடனப்பள்ளியில் சேர்ந்த நிலையில், அதே நடனப்பள்ளியில் ஆசிரியராக பிரபு என்பவர் பணியாற்றி வந்தார். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு பழக்கத்தின் பேரில், இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்தோம். 

அதனைத்தொடர்ந்து, எங்களுக்குள் காதல் ஏற்பட்டு, கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பிரபுவின் வளர்ப்புக்கு நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, என்னை மாதர்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு குளிர்பானம் மற்றும் பிஸ்கெட் எனக்கு சாப்பிட கொடுத்த நிலையில், அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கினேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது நான் நிர்வாணமாக கிடந்த நிலையில், பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தேன். 

இதனை பிரபுவிடம் கேட்கையில் திருமணம் செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். திருமணம் குறித்து பேசும் போது, இராயபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்ய ரூ.1 இலட்சம் செலவாகும் என கூறியதன் பேரில், ரூ.80 ஆயிரம் அனுப்பினேன். இப்போது, விஷயம் அவரின் தாயாருக்கும் தெரியும். 

பணம் அனுப்பி பதிவு திருமணம் செய்யாத நிலையில், அருகே இருந்த கோவிலுக்கு சென்று மாலை மாற்றினோம். இதற்கிடையில் நான் கர்ப்பமான நிலையில், காதலனிடம் கூறியபோது 100 பவுன் நகை மற்றும் ரூ.10 இலட்சம் பணம் கேட்டார். மேலும், பணம் தராத பட்சத்தில் ஆபாச விடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரபு இளம்பெண்ணை ஏமாற்றியது உறுதியாகவே அவரை கைது செய்தனர். மேலும், அவரின் தயாரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், பிரபுவின் செல்போனில் பல பெண்களின் ஆபாச படம் இருப்பதால், விசாரணை தொடர்ந்து நடக்கிறது. 


Advertisement