தமிழகம்

அந்த ஒருவார்த்தை சொன்ன கணவன்! தற்கொலை செய்துகொண்ட டாக்டர் மனைவி! அதிர்ச்சி காரணம்!

Summary:

Chennai lady doctor suicide for family problems

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.எம் நாகரை சேர்ந்தவர் மருத்துவர் வளர்மதி. இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார். மருத்துவர் வளர்மதி அவர் வேலைபார்த்துவந்த அதே மருத்துவமனையை சேர்ந்த மற்றொரு மருத்துவர் மகர ஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து 12 வருடங்கள் ஆன நிலையில் ரிஷி என்ற 11 வயது மகனும், ஓமிஷா என்ற 4 வயது மகளும் உள்ளனர். என்னதான் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் கணவன் மனைவி இருவர் இடையே அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகன் ரிஷி தான் சைக்கிளில்தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடித்துள்ளார். அதற்கு தாய் வளர்மதி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தாயின் வார்த்தையை மீறி ரிஷி அன்று சைக்கிளில் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தெரிந்தவுடன் வழக்கம்போல் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் உனக்கு குழந்தைகளை சரியாக வழக்க தெரியவில்லை என கணவர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வளர்மதி தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement