தமிழகம்

17 வயது சிறுமியுடன் திருமணம்.. காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்ட காதலனை, போக்ஸோவில் உள்ளே வைத்த போலீஸ்.!

Summary:

17 வயது சிறுமியுடன் திருமணம்.. காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்ட காதலனை, போக்ஸோவில் உள்ளே வைத்த போலீஸ்.!

சென்னையில் உள்ள குன்றத்தூர், நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனது 17 வயது மகளை காணவில்லை என்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கரண் (வயது 22) என்பவர், எனது காதலியை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அவருக்கும், எனக்கும் சட்டரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காதலியுடன் நேரில் வந்து ஆஜராகியுள்ளார். 

காவல் துறையினரின் விசாரணையில் கரண் திருமணம் செய்தது 17 வயது சிறுமி என்பது உறுதியானது. மேலும், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார் என்பதும் அம்பலமானது. இதனால் கரணின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். 

17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அவரை திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் கேட்ட இளைஞன் போக்ஸோவில் கைதாகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement