கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பாதாம்பால் வாங்கி குடிக்கிறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்., உயிருக்கு உலைவைக்கும் சுகாதார பிரச்சனை.!

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பாதாம்பால் வாங்கி குடிக்கிறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்., உயிருக்கு உலைவைக்கும் சுகாதார பிரச்சனை.!


chennai-koyambedu-bus-stand-poor-padham-milk-preparatio

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம், இந்தியாவில் மிகப்பிரதானமான பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிடுவது வழக்கம். 

இதில், பொதுமக்கள் குடித்துவிட்டு குப்பை தொட்டியில் வீசும் காலியான பாட்டிலை சேகரித்து கடைக்கு முன்பே வைத்து சுத்தமற்ற தண்ணீரால் சுத்தம் செய்வது போல பாவித்து, மீண்டும் அதனுள் பாதாம் பாலை அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த காட்சிகளை பயணி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

chennai

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், மேற்கூறிய நிகழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.