மனைவி தற்கொலை செய்த அதே நாளில்.,ரௌடி கணவன் தற்கொலை செய்து உயிரை மாய்த்த பரிதாபம்.! அனாதையாக தவிக்கும் குழந்தை.!!Chennai Kodambakkam Rowdy Suicide Feeling Sad

சென்னையில் உள்ள கோடம்பாக்கம், வரதராஜபேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 34). இவர் சூளைமேடு பகுதியில் ரௌடியாக வலம்வந்துள்ளார். இவரின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் பிரசாந்த் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

உடலில் 62 % தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டில் இதே நாளில் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துள்ளார்.

இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து வந்த பிரசாந்த், மனைவியின் முதல் ஆண்டு நினைவு நாளிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு 10 வயதில் மகன் இருக்கும் நிலையில், தாய் - தந்தையை இழந்த குழந்தை இருவரின் பாசத்திற்காக ஏங்கி தவித்து வருகிறது.