முதல் முறை... கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்கு பிரத்தியேக கழிவறை.!

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் விரைவு பயணத்தை உறுதி செய்யவும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கத்தில் ரூ.396 கோடி செலவில் பிரம்மாண்டமாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
இன்று முதல் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பேருந்து பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும் பல நவீன அம்சங்களுடன் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநங்கைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்கான பிரத்தியேக கழிப்பறையை திறந்துள்ளது. இது பலதரப்பில் வரவேற்பு பெற்றுள்ளது.