இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை கனமழை? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai IMD Announce Rain Weather Update

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Chennai RMC

29 ஆம் தேதி 30-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இலங்கைக்கு தெற்கே உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.