#Breaking: சென்னை மக்களே குடை இல்லாமல் வெளியே வராதீங்கா... 3 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை அறிவிப்பு.!

தமிழகத்தின் தலைநகரில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, தமிழகம் முழுவதும் மழைப்பொழிவை வழங்கி வருகிறது. இதனால் இன்று 13 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில், வேலைகளுக்கு செல்லும் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்புடன் மழையை ரசித்து வருகின்றனர்.