தமிழகம்

சென்னையில் ஒரே குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டு கொன்றது ஒரு பெண்? விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

Summary:

சென்னை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை சுட்டு கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியே தனது உறவினர்களுடன் சிலருடன் தனது கணவர் மற்றும் அவரது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட பைனான்சியர் தலில்சந்த் என்பவர் தனது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோருடன் சென்னை செளகார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்களால் சுட்டு கொலைசெய்யப்பட்ட மூவரும் சடலமாக கிடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்துவந்த போலீசார் குற்றம் நடந்த வீட்டில் இருந்து பெண் ஒருவர் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலில்சந்த் மகன் ஷீத்தல்கும் புனேவை சேர்ந்த ஜெயமாலா எனபவருக்கும் திருமணம் முடிந்து 13 மற்றும் 11 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றநிலையில் பிள்ளைகளுடன் ஜெயமாலா புனேவில் வசித்துவருகிறார்.

இந்நிலையில் தனக்கு கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டி ஜெயமாலா வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ராஜஸ்தான் மற்றும் சென்னையில் இருக்கும் சொத்துக்களை பிரித்து எழுதி வைக்குமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.

ஆனால் ஷீத்தல் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துவந்துள்ளனர். இந்நிலையில் ஜெயமாலாவின் சகோதரர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்து ஷீத்தல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் ஷீத்தல் குடும்பத்தினர் சொத்துக்களை பிரித்துத்தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புனேவில் இருந்து சகோதரர்கள் 2 பேர், சித்தப்பா, மாமா என 5 பேருடன் சென்னை வந்த ஜெயமாலா, தனது கணவரின் வீட்டுக்கு சென்று கடைசியாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தமுறையும் அவர்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களின் கைகளை கட்டிப்போட்டு நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொலை செய்துள்ளார் ஜெயமாலா.

போலீசாரின் விசாரணையில் கொலையாளிகளின் விவரம் குறித்து தெரியவந்ததை அடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்களை கைதுசெய்ய போலீசார் புனே விரைந்துள்ளனர்...


Advertisement