நல்லா ஓடிக்கிட்ருந்த கடை!! காலையில் கடைய திறக்க வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..Chennai grocery shop money theft

மளிகைக்கடையின் மேற்கூரையை உடைத்து கடையில் இருந்த பணம் கொள்ளையடியாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் அந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளும் மேலாக மளிகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார். மேலும் இவர் அந்தப் பகுதில் வியாபாரிகள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறப்பதற்காக டேவிட் தனது கடைக்கு சென்றுள்ளார். கடையை திறந்து உள்ளே சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததோடு, கல்லாப்பெட்டியில் இருந்த 1 லட்சத்து 90 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

Crime

மேலும், திருட வந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் கடைக்குள் தூவிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டேவிட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடையில் சிசிடிவி கேமிரா இல்லாததால், அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை திரட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.